15468 அரிந்த ஆப்பிள் கோளங்கள்.

நஸீஹா முகைதீன். மருதமுனை: புதுப்புனைவு வெளியீட்டகம், 1வது பதிப்பு, 2016. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B.மின்சார நிலைய வீதி).

iv, 71 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 23×16 சமீ., ISBN: 978-955-52575-1-0.

காத்தான்குடியைச் சேர்ந்த நஸீஹா முகைதீன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவி. அரிந்த ஆப்பிள் கோளங்கள், முற்று முழுதாக ஸ்மார்ட் போனில் தட்டச்சு செய்யப்பட்டு முகநூலில்  பிரசுரிக்கப்பட்ட கவிதைகளைக் கொண்டது. பெரும்பாலான கவிதைகள் விளிம்புநிலை மாந்தர், ஒடுக்கப்பட்டவர்கள், நொறுக்கப்படுவோர், ஏங்கிக் கிடப்போர் பற்றிப் பேசுகின்றன. இன்னொரு வகையில் சொல்லப்போனால், போர், புரட்சி, சுதந்திரம், அகதிமை, சிறுமி, சிறுவர், தாய்மை, அடிமை, தோல்வி, வாழ்வைக் கண்டடையத் துடிக்கின்ற ஏக்கம், பெரும் சலிப்பு என்பன பற்றிப் பேசுகின்றன. தனது தாய்நாட்டு யுத்தத்தைப் பற்றி மாத்திரம் பேசிக்கொண்டிராமல், உலகளாவிய யுத்தங்களைப் பற்றியும் அவை விட்டுச்சென்ற தளும்புகள், மானிட வதை பற்றியும் பேசுகின்றன.

ஏனைய பதிவுகள்

Best 5 Playing Dice Game

Articles Play 17,000+ Free Gambling games Inside Demo Setting Tips Play From the Ethereum Gambling enterprises? How do i Gamble Craps And you will Dice