15470 அவள் வீடு.

சித்ரா பிரசன்னா. யாழ்ப்பாணம்: இளங்கீரன், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: ஸ்ரீமாருதி பிரின்டர்ஸ், 55, நாவலர் வீதி).

v, 60 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-43582-0-1.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான திருமதி சித்ரா பிரசன்னா யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆசிரியராவார். ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறிய கவிதைகளைக் கொண்டதாக இத்தொகுதி அமைகின்றது. ‘வாசலில் நின்று வரவேற்க முடியாதவளாய், மலர் சூடி மாங்கல்யம் அணிய முடியாதவளாய், அலங்காரங்கள் அத்தனையும் மறுக்கப்பட்டவளாய், சுப நிகழ்வுகளில் சுபம் வரை காத்திருப்பவளாய், சுமைகளுக்குள் வலிந்து சுமத்தப்பட்டவளாய், துரத்தித் துரத்தி வதைக்கப்பட்ட ஒருத்தியின் நினைவுகளின் சின்னச் சின்னச் சிதைவுகள் உள்ளே சிதறிக் கிடக்கின்றன. புன்னகை மறக்காமல், கண்ணீரை மறைக்காமல், தன்னாலும் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கையில் மீண்டும் வாசலுக்கு வந்திருக்கின்றாள்-ஏனெனில் இது அவள் வீடு.’  

ஏனைய பதிவுகள்

15327 முதலாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு 2020: வரலாற்றுப் போக்கில் தமிழியல் ஆய்வுகள்: ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு.

ம.இரகுநாதன், ஈ.குமரன், க.அருந்தாகரன் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜனவரி 2020. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி). xix, 807 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

17441 வீட்டிற்கு வெளியே மற்றும் கடலருகே இரு சிறு முயல்களும் கழுதையொன்றும்.

குழந்தை ம.சண்முகலிங்கம் (மூலம்), நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 52 பக்கம்,