15480 இரவின் எதிரிப் பூக்கள்.

வட அல்வை இராஜகிருபன். (இயற்பெயர்: தங்கவடிவேல் கிருபாகரன்), சி.ரஜேந்தனா (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xii, 40 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-5249-63-8.

அமரர் தங்கவடிவேல் கிருபாகரன் வடமராட்சி, அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 2002இல் விஞ்ஞானமானிப் பட்டதாரியான இவர் திருக்கோணமலையில் இரசாயனவியல் ஆசிரியராகப் பணியாற்றியவர். 2020இல் சுகவீனம் காரணமாக மறைந்த இவரது கவிதைகளைத் தொகுத்து அவரது மறைவின் 31ஆம் நாள் கிரியைகளின் போது நூலுருவில் அவரது நினைவாக 166ஆவது ஜீவநதி வெளியீடாக வெளியிட்டுள்ளனர். தனது அனுபவங்களை தான் கண்ட சமூக முரண்பாடுகளை, அவலங்களை, போலியான மானுடர்களின் பொய்மை முகங்களை, இன்றும் மறையாதிருக்கும் யுத்தத்தின் சாட்சிகளை, காதலை, கனவுகளை, ஏக்கங்களை தனது கவிதைகளில் எளிமையாகவும் வலிமையாகவும் இராஜகிருபன் சொல்லியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

17376 சிறுநீரகக் கற்கள்: சிகிச்சை முறைகளும் ஆலோசனைகளும்.

பா.பாலகோபி, பிரம்மா ஆர்.தங்கராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). viii,

11557 மகா பாரதம்: சூது போர்ச் சருக்கம்.

வில்லிபுத்தூராழ்வார்; (மூலம்), சி.கணேசையர் (உரையாசிரியர்). சுன்னாகம்: தனலக்குமி புத்தகசாலை, 1வது பதிப்பு, 1939. (அச்சக விபரம் தரப்படவில்லை). xii, 191 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 21.5×13.5 சமீ. மகாபாரதத்தில் துரியோதனனது தூண்டுதலால்