15482 இராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை கவித் திரட்டு.

கு. முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: கு. முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை, புலவரகம், மயிலணி, 1வது பதிப்பு, 1974. (யாழ்ப்பாணம்: ஸ்ரீசண்முகநாத அச்சகம்).

(4), 16 பக்கம், விலை: சதம் 75, அளவு: 17.5×12 சமீ.

மலாய் நாட்டு இளைப்பாறிய உத்தியோகத்தர் கொல்லன்கலட்டி உயர்திரு ந.பொ.செ.இலங்கைநாயகம் அவர்கள் விரும்பியவாறு சுன்னாகம் கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்களால் இந்நூல் பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளது. ஏட்டிலிருந்த அருந்தமிழ் நூல்கள் பலவற்றைத் தேடிக் கண்டுபிடித்து அச்சிட்டுத் தமிழன்னைக்கு ஒப்புயர்வற்ற தொண்டினை ஆற்றியவர் இராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளையாவார். அவருடைய செந்தமிழ்ப் பரிபாலனத் தொண்டை வியவாதவர் இல்லையென்று கூறுதல் மிகையாகாது. பிள்ளையவர்கள் சிறந்த பதிப்பாளராக விளங்கியதோடு சிறந்த பாவாணராயும் விளங்கினார். அவர் பற்பல சந்தர்ப்பங்களிற் சீட்டுக்கவிகள், துதிக்கவிகள், இரங்கற்கவிகள் முதலியவற்றை இயற்றியுள்ளார். அவற்றுட் கிடைத்தவற்றைத் திரட்டி உருவாக்கப்பட்டதே இக்கவித்திரட்டு. இக்கவித்திரட்டில் வரும் பாக்கள் பிள்ளையவர்களின் கவித்துவ ஆற்றலை நன்கு புலப்படுத்தும்.

ஏனைய பதிவுகள்

Adrenaline Spielsaal Testbericht 2024

Content Der Spieler kann sein Bares keineswegs anders sein. Echtgeld Spielbank und Demoversion? Hilfe ausfindig machen Nichtsdestotrotz unserer Hilfsbemühungen und mehreren Fristverlängerungen hat ein Spieler