15487 இன்னுமொரு தேசம்.

கணபதிப்பிள்ளை கணேசலிங்கம். யாழ்ப்பாணம்: கணபதிப்பிள்ளை கணேசலிங்கம் (கவி கலி), 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).

xviii, 93 பக்கம், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

வடமராட்சி மண்ணில் அல்வாய் வடக்கு கிராமத்தில் பிறந்த நூலாசிரியர், புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வருகிறார். ‘புலம்பெயர் வாழ்வின் நெருக்கடிக்குள் தன்னை இழந்துவிடாது, சொந்த மண்ணை மறவாத பற்றுறுதியில் கவிதைகள் படைத்து வருபவர். தனது கவிதாளுமையால் சமகால நெருக்கடி பற்றிச் சிந்திக்கவைக்கும் பல கவிதைகளைத் தனது முகநூலில் அவ்வப்போது பதிவுசெய்து வந்தவர். அவற்றைத் தொகுத்து கவி கலியின் ’இன்னுமொரு தேசம்’ இங்கு மலர்ந்துள்ளது. எதனையும் கேள்விக்குட்படுத்தி, பழமைவாதக் கருத்துக்களை கட்டுடைக்கும் போக்கும், அதற்கு மாற்றீடாக முற்போக்கான கருத்துக்களை வரித்துக்கொண்ட இயல்பும் அவரிடம்  இளமைப் பருவத்திலேயே கருக்கொண்டிருந்தது. அதன் வெளிப்பாட்டினை இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் இனங்காட்டியுள்ளார். இவரது கவிதைகள் சமூக அளவில் ஒருமித்த சில நம்பிக்கைகளை ஏற்படுத்துகின்றன. அதேயிடத்து, சில கேள்விகளையும் எழுப்புகின்றன. அவை சமூகத்தின் சுயம் அழியாது அதன் வேரடி மண்ணில் கால்பதித்து நிற்பது பாராட்டுக்குரியது.’ (மு.அநாதரட்சகன், முன்னுரையில்).

ஏனைய பதிவுகள்

Best 100 Real cash Online casinos

Content How to win in bingo | A huge Directory of Internet casino Ports You could potentially Wager Enjoyable Totally free Game Put And you