15488 இன்னொரு கண் (புதுக்கவிதை).

யாழ் அகத்தியன் (இயற்பெயர்: ஏரம்பமூர்த்தி காண்டீபன்). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், உடையார்கட்டு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).

x, 98 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், தகடுகள், விலை: (ஐந்து நூல்கள் கொண்ட தொகுதி) ரூபா 750., அளவு: 10×18.5 சமீ., ISBN: 978-955-4096-16-5.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட யாழ். அகத்தியன், புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பின்னர் உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் தொடர்ந்து பயின்றவர். போர்க்கால வாழ்வை அனுபவித்தவர். புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழ்ந்தாலும் வெளிநாட்டு வாழ்வில் கரைந்து விடமுடியாதவர். பிரபல கவிஞர்களின் படைப்பாக்கங்களுடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொண்டவர். இவரது முதல் படைப்பு ஆனந்த விகடனில் பிரசுரமானது. தொடர்ந்து தமிழகப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இவரது படைப்பாக்கங்கள் வெளிவந்திருந்தன. சுமார் 15 ஆண்டுக்கால அனுபவத்துடன் இத்தொகுப்புகளை மேற்கொண்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Casino Online Moldova

Content Book of ra rotiri fără sloturi – Păreri De Mr Bit Casino România 2024 Accesați Lista Slotv Să Sloturi Recomandate Bonus Casino Ş Prezentare