15499 எதிர் நீச்சல்: மர்ஹீம் கவிஞர் வீ.எம்.நஜிமுதீனின் கவிதைகள்.

வீ.எம்.நஜிமுதீன் (மூலம்), கே.எம்.எம்.இக்பால், எஸ்.மஜீன் (தொகுப்பாசிரியர்கள்). மூதூர்: எம்.எம்.கே.பவுண்டேஷன், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2011. (கிண்ணியா-2: குரல் பதிப்பகம்).

46 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

மூதூர் கிராமத்தின் புகழ்பூத்த இஸ்லாமியக் கவிஞரான புலவர் நெய்னாகான் வழிவந்த பரம்பரையில் உதித்த மற்றுமொரு கவிஞராக கலாபூஷணம் வீ.எம்.நஜிமுத்தீன் அமைகின்றார். சந்தக் கவி எழுதும் ஆற்றலை முதுசொமாகப் பெற்றவர்.  1970களில் வளர்ந்த மரபுக் கவிஞர்களுள் அமரர் வீ.எம். நஜிமுத்தீன் குறிப்பிடத்தகுந்தவர். மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவராகவும், இளம்பிறை இளைஞர் இயக்கத்தின் அமைப்பாளராகவும் இருந்துள்ள இவர் 1970களில் எழுத்துத்துறையில் ஈடுபட்டவர். இவரது மறைவின் பின்னர் அவரது 25 மரபுக் கவிதைகளின் தேர்ந்த தொகுப்பாக இந்நூல் எம்.கே. பவுண்டேஷன் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. மதுவைக் குடிக்க மாதா சொன்னாளா? இதையே கேட்கிறார், பேணி வளர்க்கணும், வாழ்க்கை இதுதான், துறவி ஆகின்றேன், உய்யப் பற்றுவோம், உலகில் தயாராவோம், மதியும் மனிதனும், கந்தன் செய்த தோட்டம், பொட்டோடு வாழவையுங்கள், நிகர் எதுவும் உண்டோ?, எல்லாம் இங்கு வாழும், என்றும் பிரச்சினை, பசி, கொச்சிக்காய், வேறு என்ன செய்வார்கள், வாழவைக்கும் கல்வி, இன்னும் கவலையா?, சோம்பலைத் துறப்போம், தேயிலை படும் பாடு, சின்னக் குழந்தை, தூய்மைக்கு நிகராகாது, காலை ஒன்று பிறக்குதே, சாந்தி தர்மம் நிலைக்கட்டுமே, உதவிடுவீர், அவளும் இவளும், எதிர் நீச்சல், எமது தந்தை ஆகிய தலைப்புகளில் இக்கவிதைகள் எழுதப்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Wol Fang

Volume Arabian Charms online slot – Rise Of Samurai Megaways Reserve Verwittiging Sticky wilds aanblijven mits paar symbolen inschatten hen affaire werken indien daar men