15502 என் கொல்லைப்புறத்து நதி.

கோவுஸ்ஸ கே.ராம்ஜி உலகநாதன். பண்டாரவளை: சிகரம் வெளியீடு, தமிழ் இலக்கியப் பேரவை-ஊவா, 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).

xviii, 94 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-624-95290-0-7.

ஊவா மாகாணத்தைச் சேர்ந்த கவிஞர் கோவுஸ்ஸ கே.ராம்ஜி உலகநாதனின் கவிதைகள் வாசிப்பதற்கு இதமானவை மட்டுமல்ல, சிந்தனைகளை தூண்டக்கூடியவை. நகைச்சுவை மிக்கவை. உண்மைகளையும் உயிர்த் துடிப்புகளையும் சமூக நிகழ்வுகளையும் நேர்மையுடன் உள்வாங்கி அவற்றை சுவைமிகு கருத்துக்களுடன் கூடிய கவிதை வடிவில் தந்திருக்கிறார். இராவணன் எல்லையின் சிறப்பை அந்த நதியின் வளமான காலத்தில் அள்ளிக்கொடுத்து மறுமையான வரட்சிக் காலத்தில் கிள்ளிக்கொடுக்கும்  தத்துவத்தை கவிதையில் வடிக்கும் இவர், தமிழர்களின் முதுசொம் பற்றியும் கூறுகின்றார். இந்திய வம்சாவளி மக்களின் இறைவழிபாட்டோடு உறவாகிப் போன இராவண எல்லையும் தோவை பெருமாள் கோவிலும் இம்மக்களின் இதயத் தடிப்பையும் பறிபோன முதுசொத்தையும் எடுத்துரைக்கத் தவறவில்லை. எழுபதுகளிலிருந்து எழுதிவரும் இவர் கவிதைகளை மட்டுமல்லாது பல கதைகளையும் எழுதியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

What’s Quicker Fruit juice Playing

Posts Vig Vigorish: betfred acca bet Trey Wingo Better United states Online Sportsbooks With reduced Juice Figuring Earnings With Western Opportunity The brand new exchange-from