15517 கடலோரத் தென்னைமரம்.

கவிமணி நீலாபாலன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).

xviii, 116 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-0958-01-6.

ஜீவநதியின் இருபதாவது வெளியீடாக வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுதி. இலக்கண வழுவற்ற ஓசைநயம்மிக்க கவிதைகளைப் புனைவதில் நீலாபாலன் குறிப்பிடத்தக்கவர். காலத்தின் நடப்பியலை இவரது கவிதைகள் சமூக அக்கறையுடன் வெளிப்படுத்துகின்றன. இந்நூலில் இடம்பெறும் அக்கினிப் பாவலன் என்ற முதலாவது கவிதையே இவரது ஒட்டுமொத்த கவித்துவ வலிமையைப் புரிந்துகொள்ளப் போதுமானதாக இருக்கின்றது. வாழ்க்கைக் கலைக்கு என்னும் கவிதையில் ஆண்-பெண் இணைந்த வாழ்வின் பெருமையை கூறுகின்றார். பருந்துகள் என்ற கவிதையில் சமூகத்தில் வாழும் மனிதர்களின் குணங்களை அழகாய் விபரிக்கின்றார். இத்தகைய கவிச் செழுமைமிக்க அறுபது கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Rooli Casino

Content Velkomstbonus Uten Omsetningskrav Bitstarz Casino Da Tilbyr Casinoer Akkvisisjon Uten Almisse? Ingen Innskuddsbonus Kontantbonus Igang De Beste Nettkasinoene 2024 Ellers er det blitt mer