15517 கடலோரத் தென்னைமரம்.

கவிமணி நீலாபாலன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).

xviii, 116 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-0958-01-6.

ஜீவநதியின் இருபதாவது வெளியீடாக வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுதி. இலக்கண வழுவற்ற ஓசைநயம்மிக்க கவிதைகளைப் புனைவதில் நீலாபாலன் குறிப்பிடத்தக்கவர். காலத்தின் நடப்பியலை இவரது கவிதைகள் சமூக அக்கறையுடன் வெளிப்படுத்துகின்றன. இந்நூலில் இடம்பெறும் அக்கினிப் பாவலன் என்ற முதலாவது கவிதையே இவரது ஒட்டுமொத்த கவித்துவ வலிமையைப் புரிந்துகொள்ளப் போதுமானதாக இருக்கின்றது. வாழ்க்கைக் கலைக்கு என்னும் கவிதையில் ஆண்-பெண் இணைந்த வாழ்வின் பெருமையை கூறுகின்றார். பருந்துகள் என்ற கவிதையில் சமூகத்தில் வாழும் மனிதர்களின் குணங்களை அழகாய் விபரிக்கின்றார். இத்தகைய கவிச் செழுமைமிக்க அறுபது கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

15710 சுருதி மாறிய புல்லாங்குழல்.

தேனூர் கௌசிகன் (இயற்பெயர்: கந்தசாமி கௌசிகன்). மட்டக்களப்பு: வெளியீட்டுக் கழகம், தேனூர் தமிழ்ச் சங்கம், தேற்றாத்தீவு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (வவுனியா: ஓல் இன் வன் அச்சகம்). (14), 77 பக்கம், சித்திரங்கள்,

12214 – பண்டைத் தமிழ்ச் சமூகம்: வரலாற்றுப் புரிதலை நோக்கி.

கார்த்திகேசு சிவத்தம்பி. சென்னை 600002: மக்கள் வெளியீடு, 49, உனிசு அலிசாகிப் தெரு, எல்லிசு சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2003.(சென்னை 600005: தேவா ஆப்செட்). 176 பக்கம், விலை: இந்திய ரூபா 60.,