அ.சண்முகதாஸ். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xiv, 268 பக்கம், விலை: ரூபா 850., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659- 624-3. தமிழ் இலக்கிய, இலக்கண ஆய்வுகளே தமிழாய்வு என முன்னர் கருதப்பட்டது. ஆனால் இன்று தமிழ் ஆய்வு என்பது தமிழியல் ஆய்வு என விரிவடைந்துள்ளது. தமிழ் இலக்கியம் இலக்கணம், தமிழ் மொழியியல், தமிழ் நாட்டார் வழக்காற்றியல், தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு, தமிழ் இசை, தமிழ் நாடகம், தமிழ் மருத்துவம், தமிழ்க் கல்வி முதலிய பல ஆய்வுக் களங்களை உள்ளடக்கியதாக தமிழியல் ஆய்வு அமைகின்றது. இந்நிலையில் இலங்கையில் இடம்பெற்ற தமிழியல் ஆய்வு முயற்சிகளை வரலாறு, பண்பாடு, இலக்கியம், மொழி, நாட்டார் வழக்கியல், அவைக்காற்று கலை, இதழியலும் பொதுமக்கட் சாதனமும், கல்வி, பிற ஆய்வுகள் ஆகிய தலைப்புகளினூடாக இந்நூல் விபரிக்கின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாட் பேராசிரியரான பேராசிரியர் அ.சண்முகதாஸ், தனது இளங்கலைமாணிப் பட்டத்தினையும் முதுகலைமாணிப் பட்டத்தினையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டவர். முனைவர் பட்டத்தினை பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் பெற்றவர். தமிழ்த்துறை, மொழிப்பண்பாட்டுத்துறை, இசைத்துறை ஆகியவற்றின் தலைவராகவும் கலைப் பீடாதிபதியாகவும், உயர்பட்டப் பீடாதிபதியாகவும் பதில் துணைவேந்தராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்.
Online gambling Real deposit 10 play with 80 casino casino cash Sites Best 10 inside the 2024
Articles Sparta Are Much more Than an army from Super Warriors | deposit 10 play with 80 casino casino Could it be Secure to help