எழுத்தாளர் குழு. கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி). 555 பக்கம், விலை: ரூபா 3000., அளவு: 24×18.5 சமீ., ISBN: 978-955-9180-41-8. தற்போதைய அரச கரும மொழிகள் கொள்கையான மும்மொழி கோட்பாட்டினை செயற்படுத்தல் மற்றும் மும்மொழி தொடர்பான வசதிகளை திட்டமிடும் பொறுப்புள்ள பிரதான அரச நிறுவனம் அரசகரும மொழிகள் திணைக்களமாகும். முதன்முறையாக தமிழ் தலைப்புச் சொற்களுடன் பிரயோக மும்மொழி அகராதி (Comprehensive Practical Trilingual Dictionary with Tamil Headwords) ஒன்றினை மிகவும் குறுகிய கால எல்லைக்குள் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் 60ஆம் ஆண்டு நிறைவு நிமித்தமாகப் பிரசுரித்துள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65465).