அருட்திரு தமிழ்நேசன் அடிகள் (இயற்பெயர்: அருட்திரு பாவிலு கிறிஸ்து நேசரெட்ணம்). மன்னார்: கலையருவி வெளியீடு, சமூகத் தொடர்பு அருட்பணி மையம், மன்னார் மறை மாவட்டம், புனித சூசையப்பர் வீதி, பெற்றா, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (மன்னார்: ஸ்கை பிரின்டர்ஸ்). xiiiஇ 146 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-7351-02-5. தமிழியல் சார்ந்து ஆய்வுநோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. “தமிழும் தனிநாயக அடிகளும்” என்ற முதலாவது பிரிவில் தமிழை சர்வதேச மயப்படுத்தியதில் தனிநாயகம் அடிகளாரின் தனித்துவமான பங்களிப்பு, தமிழில் அச்சேறிய முதல் நூல்களும் அவற்றைக் கண்டுபிடித்த தனிநாயகம் அடிகளாரின் பெருமுயற்சியும், ஈழத் தமிழரின் உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்த தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் ஆகிய கட்டுரைகளும், “தமிழும் செம்மொழித் தகுதியும்” என்ற இரண்டாவது பிரிவில் தமிழின் செம்மொழித் தகைமை, தமிழின் செம்மொழித் தகுதியை நிலைநாட்டிய பேராசிரியர் ஜோர்ஜ் எல். ஹார்ட், தமிழ் மொழியின் தனித்தன்மையை நிலைநாட்டிய வெளிநாட்டுத் தமிழறிஞர் டாக்டர் கோல்டுவெல், தமிழின் செம்மொழித் தகுதியை நிலைநாட்டிய அறிஞர்களின் கருத்துக்கள் ஆகிய கட்டுரைகளும், “தமிழும் இலக்கியமும்” என்ற மூன்றாவது பிரிவில், இலக்கியத்தின் இயல்பும் அதன் சமூக ஊடாட்டமும், இலக்கியத்தின் உள்ளீடாக அமையவேண்டிய மானிட உண்மைகள், நவீன கவிதைகளில் சமகாலப் பண்பாடு, இலங்கைத் தமிழ் ஆய்வில் பெண்கள் ஆகிய கட்டுரைகளும், “தமிழும் கிறிஸ்தவமும்” என்ற நான்காவது (இறுதிப்) பிரிவில் பண்பாட்டுச் சூழமைவில் கிறிஸ்தவம், ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் தோன்றிய முதல் கிறிஸ்துவ இலக்கியம் சந்தியோகுமையோர் அம்மானை, கத்தோலிக்க புலவர்களின் வரலாற்றைக் கூறும் மன்னார் மாதோட்டத் தமிழ்ப் புலவர் சரித்திரம் ஆகிய கட்டுரைகளும் என மொத்தம் 14 படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மேலதிகமாக எட்டு புகைப்படங்களின் பின்னிணைப்புகளும் இறுதியில் காணப்படுகின்றன.