14428 பத்தாவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு 2007.

மலர்க் குழு. மலேசியா: பத்தாவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டு அமைப்புக் குழு, மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர், 1வது பதிப்பு, ஜுலை 2007. (கோலாலம்பூர்: மால் ஜெயா என்டர்பிரைசஸ்). 116 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ. குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் அவர்களை நிறுவனராகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் 1974இல் ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தனது 34ஆவது அகவையில், பத்தாவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டினை 20-22, ஜுலை 2007 அன்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தியது. அவ்வேளையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். வாழ்த்துரைகள், ஆசியுரைகள் மற்றும் கட்டுரைகளுடன் கூடியது.

ஏனைய பதிவுகள்

12871 – மறைந்த நாகரிகங்கள்.

ந.சி.கந்தையா. சென்னை 600017: அமிழ்தம் பதிப்பகம், யு 4, மாதவ் குடியிருப்பு, 5 டாக்டர் தாமசு சாலை, தியாகராய நகர், 2வது பதிப்பு, 2004, 1வது பதிப்பு, 1950. (சென்னை 600 017: தமிழ்மண்