தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (மகரகம: அச்சகப் பிரிவு, தேசிய கல்வியியல் நிறுவகம், பானலுவ). ix, 50 பக்கம், விலை: ரூபா 80.00, அளவு: 29.5×21 சமீ. விசையியலிலும் இயற்பியலிலும், எளிமை இசையியக்கம் அல்லது தனிச் சீரிசை இயக்கம் என்பது மீள் விசைக்கு இடப்பெயர்ச்சி நேர் விகித சமமாக உள்ள அலைவு இயக்கமாகும். (அதாவது ஆர்முடுகல் எப்போதும் நிலைத்த புள்ளியை நோக்கி இருக்கும்). இது சுருளிவில்லின் அலைவு போன்ற பல்வேறு இயக்கங்களின் கணித மாதிரியாக கொள்ளப்படுகிறது. இதைவிட மற்ற இயக்கங்களான ஒரு எளிய ஊசலின் இயக்கம் மற்றும் மூலக்கூறு அதிர்வு போன்றவற்றையும் ஏறக்குறைய எளிய இசையியக்கமாக கொள்ளலாம். ஹ_க் இன் விதிக்கு ஏற்ப மீள்விசைக்கு உள்ளாகும் சுருளி வில்லில் உள்ள ஒரு திணிவின் இயக்கத்தை எளிய இசையியக்கமாக வகைகுறிக்கலாம். எளிய இசை இயக்கம் நேரத்துடன் சைன் வளையியாகவும் ஒரேயொரு ஒத்ததிர்வு அதிர்வெண்ணைக் கொண்டதாகவும் உள்ளது. எளிய இசையியக்கமானது மிகவும் சிக்கலான இயக்கத்தை ஃபோரியர் பகுப்பாய்வு நுட்பங்கள் மூலம் வகைப்படுத்த ஒரு அடிப்படையை வழங்குகிறது. இந்நூல் எளிமை இசை இயக்கம், எளிமை இசை இயக்கத்தை, சீரான வட்ட இயக்கத்தின் மூலம் விவரணம் செய்தல், மீள்தன்மை இழையொன்றுடன் இணைக்கப்பட்டுள்ள துணிக்கையொன்றின் இயக்கம் ஆகிய மூன்று பாடங்களில் விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65688).