14455 க.பொ.த (உயர்தரம்) இணைந்த கணிதம்: வேலை-சக்தி-வலு.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). vii, 43 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 70.00, அளவு: 29.5×21 சமீ. இந்நூலில் வேலை (வேலை-அறிமுகம்/ மாறா விசை ஒன்றினால் செய்யப்படும் வேலை/ புள்ளிப் பெருக்கத்தின் மூலம், மாறா விசையொன்றினால் செய்யப்படும் வேலையைக் கணித்தல்/ மாறும் விசையொன்றினால் செய்யப்படும் வேலை/ வேலையின் அலகு, பரிமாணம்), சக்தி (சக்தி-அறிமுகம்/ சக்தியின் அலகு பரிமாணம்/ வகைகள் சக்தி/ காப்பு நிலை விசை/ விரய விசை/ அழுத்த சக்தி), மீள்தன்மை அழுத்த சக்தி (மீள்தன்மை இழை/ மீள்தன்மை வில்/ ஊக்கின் விதி/ மீள்தன்மை அழுத்த சக்தி), பொறிமுறைச் சக்திக் காப்பு (அறிமுகம்/ பொறிமுறைச் சக்திக் காப்புக் கோட்பாடு), வலு (வலு/ வலுவின் அலகு, பரிமாணம்ஃ எஞ்சினொன்றின் வலு) ஆகிய பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam 5747).

ஏனைய பதிவுகள்

14301 இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறாவது தேசிய மாநாட்டின் உத்தேச அறிக்கை.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி. கொழும்பு: இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1960. (கொழும்பு: லங்கா பிரஸ், பொரளை). 74 பக்கம், விலை: 25 சதம், அளவு: 22×13.5 சமீ. 1960 ஒக்டோபர்

14861 கொங்கு வேளீர் இயற்றிய கொங்குவேண் மாக்கதை எனும் பெருங்கதை: ஆய்வு நோக்கு.

க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்). கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, 2008. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ). 280+56 பக்கம்,