14459 வேற்றுக் கிரக மனிதர்கள்.

கனி-விமலநாதன் (இயற்பெயர்: சின்னையா ரிட்ஜ்வே விமலநாதன்). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட் பிரிண்டேர்ஸ்). 128 பக்கம், விலை: இந்திய ரூபா 35.00, அளவு: 17.5×12.5 சமீ. ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுக்கிரக ஜீவராசிகள் பற்றிப் பேசும் இந்நூலில் விண்வெளி, வேற்றுக்கிரக மனிதர்கள்- பழைய சான்றுகளில் பார்வை, வயல் வட்டங்கள், வேற்றுக்கிரக மனிதர்களின் விமான விபத்துக்கள், றொஸ்வெல் விவகாரம், றொஸ்வெல் விவகார முடிவு, இன்னமும் சில, முடிவாக, உயிரினத்தின் தோற்றம், வெளிக்கிரகவாசிகள் என்பது சாத்தியமா?, வெளி உலகவாசிகளுடன் தொடர்புகள், வேற்றுக்கிரக மனிதர்கள் -சான்றுகள் ஆகிய 12 கட்டுரைகளின் வாயிலாக வேற்றுக்கிரக மனிதர்கள் பற்றிய பல்வேறு தகவல்களை ஆசிரியர் பதிவுசெய்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியான விமலநாதன் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையில் கணித, பௌதிக ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் கனடாவிற்குப் புலம்பெயர்ந்து சென்று அங்கு குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32799).

ஏனைய பதிவுகள்

Cellular Local casino

Blogs Complaints In the Relevant Twist Palace Gambling establishment Requirements I Used to Rates Gambling enterprises No Put Bonuses Better 100 percent free Position Online

12441 – அகில இலங்கை தமிழ்மொழித் தினம் 1992

. மலர்க் குழு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, உயர் கல்வி அமைச்சு, இணை வெளியீடு, கொழும்பு: கல்வித் திணைக்களம், மேல் மாகாணம், 1வது பதிப்பு, ஜுலை 1992. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161,