சியாமளா கந்தையா, லோஜனா சிவகுருநாதன், (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1998. (யாழ்ப்பாணம்: தயா அச்சகம், 138 நாவலர் வீதி). (16), 96 பக்கம், தகடு, அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19.5 சமீ. சித்த மருத்துவம் இதழ் 1985 இல் வெளிவர ஆரம்பித்தது. யாழ் சித்த மருத்துவ மாணவர் ஒன்றியத்தால் இந்த இதழ் வெளியீடு செய்யப்பட்டது. இதன் ஆரம்பகால ஆசிரியர்களாக எஸ்.எஸ்.சிவசண்முகராஜா, பி.வி. விமலதாஸ் போன்றோர் விளங்கினார்கள். சித்தமருத்துவம், சித்த பயன்கள், சித்த மருத்துவ முறைகள், சித்தர்கள், யோகாசனம் போன்ற பல சித்த மருத்துவம் சார்ந்த விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளிவந்தது. 1997/98 ஆண்டுகளுக்குரிய இவ்விதழில் உற்சாகத்தைத் தூண்டும் உணர்வை மாற்றும் பதார்த்தங்கள் (எஸ்.சிவபாதம்), நீரிழிவும் மதுமேகச் சூரணமும் ஓர் ஆய்வு (சைலஜா சிவராஜா), காய்ச்சல் சொல்லும் கதை (லோஜனா சிவகுருநாதன்), மலச்சிக்கலும் இலகு தீர்வுகளும் (செ.பரமசிவம்பிள்ளை), கனவுகளும் நிஜங்களும் (வ.அனவரதன்), வட-கிழக்கு மாகாணத்தில் சுதேச மருத்துவத்தின் இன்றைய நிலையும் மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கு நாம் ஆற்ற வேண்டிய செயற்பாடுகளும் (சுப்பிரமணியம் பவானி), சித்த வைத்தியம் அது ஒரு சித்திரம் (ப.இந்திராணி), பெரியமஞ்சள் எண்ணெய் செயலாற்றும் திறன் பற்றி ஆராய்தல் (க.ஸ்ரீதரன்), கலை-சிறுகதை (சு.அரவிந்தன்), இயற்கையோடு வாழ்க்கை (என்.ஜீவலதா), சுதேச மருத்துவ வளர்ச்சியில் (த.திலீபன்), முத்தேசங்களை மேற்கத்திய வைத்திய உடற்றொழிலியலுடன் ஒப்பிட்டு நோக்கல் (எஸ்.தில்லைநாதன்), நெடுந்தீவுப் பிரதேசத்தில் காணப்படும் மூலிகைகளின் பரம்பல் பற்றிய ஆய்வு (செல்விகள் இ.இரத்தினசிங்கம், அ.நவரட்ணம், சி.சோமசுந்தரம்), கவலைகளைக் கலைக்கலாமா? (சி.கிளமென்ரீனா), தாய் சேய் நலன் (எஸ்.சிவலட்சுமி), சித்த மருந்துகளில் அதிகம் வீரியமும் வன்மையுமுடைய மாத்திரைக் கட்டு (பொன் இராமநாதன்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
Gamble Da Vinci Expensive diamonds Dual Play 100 percent free: Comment & Advantages Drawbacks
Blogs DaVinci Diamonds On the internet Slot FAQ | Fone casino reviews Salut (Hi) my name is Tim, at this time i live in a