கே.என். மான்கோட்டே (மூலம்), சீரங்கன் பெரியசாமி (தமிழாக்கம்). பேராதனை: பணிப்பாளர், விரிவாக்க பயிற்சிப் பிரிவு, த.பெட்டி எண். 18, விவசாயத் திணைக்களம், விவசாய கால்நடை அமைச்சு, 1வது பதிப்பு, 2003. (பேராதனை: விவசாயத் திணைக்கள அச்சகம், கண்ணொறுவ). (4), 82 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 50.00, அளவு: 29×21.5 சமீ. இந்நூலில் மரக்கறிப் பயிர்ச்செய்கை பற்றிய விபரங்கள் ஒவ்வொரு மரக்கறி வகையின் கீழும் விரிவாகத் தரப்பட்டுள்ளது. கத்தரி, பீர்க்கு, புடோல், பாகல், கெக்கரி, பூசணி, வெண்டி, மரக்கறிக் கௌபீ, சிறகவரை, தக்காளி, போஞ்சி, முள்ளங்கி, கரற், பீற்றூட், லீக்ஸ், கறி மிளகாய், கோவா, மரக்கறி நாற்று மேடை, சேதன இரசாயன பசளைப் பாவனையின் முக்கியத்துவம், மரக்கறிகள் வீணாவதைத் தவிர்த்தல், அறுவடை செய்யும்போது கவனிக்க வேண்டியன ஆகிய தனித்தனித் தலைப்புகளில் இவை விபரிக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34516).