14478 கல்விப்பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்புக்களுக்கான மனைப் பொருளியல்: உசாத்துணை நூல்.

தேசிய கல்வி நிறுவகம். மஹரகம: தொழினுட்பக் கல்வித் துறை, விஞ்ஞான தொழினுட்பப் பீடம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, ஆணடு விபரம் தரப்படவில்லை. (மஹரகம: அச்சகம், தேசிய கல்வி நிறுவகம்). x, 225 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 470., அளவு: 29.5×20.5 சமீ., ISBN: 978-955-654-649-1. புதிய கலைத்திட்ட மீளாய்வு, 2007இல் மேற்கொள்ளப்பட்டு 2008இல் க.பொ.த. உயர்தர வகுப்பகளுக்கான தேர்ச்சி மையக் கலைத்திட்டம் பாடசாலை முறைமையில் அறிமுகம் செய்யப்பட்டது. மனைப் பொருளியல் என்னும் இந்தப் பாடத்துறையானது நான்கு பாடப் பரப்புகளின் தொகுப்பாக அமைகின்றது. மனை முகாமைத்துவம், உணவும் போசணையும், புடவைத் தொழினுட்பவியல், பிள்ளை விருத்தி ஆகியனவே அவை. இந்தப் பாடப்பரப்புகள் காலவோட்டத்துடன் மாறி வருபவை என்பதால் ஆசிரியர்களை இற்றைப்படுத்தவும் மாணவர்களுக்கு வழிகாட்டவும் இந்நூல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதில் மனைத்திட்டமிடலும் அழகுபடுத்தற் கோட்பாடுகளும், கலைத்துவ அடிப்படைகள், மனை அலங்கரிப்பும் திட்டமிடற் கோட்பாடுகளின் பயன்பாடும், பிரதான போசணைப் பதார்த்தங்கள், உணவு வேளைகளைத் திட்டமிடல், நோய்களைத் தவிர்ப்பதில் உணவின் பங்களிப்பு, தொழினுட்பத்தைப் பயன்படுத்தி உணவின் தரத்தை மேம்படுத்தல், உணவு நற்காப்பு, புடைவைகளதும் ஆடைகளதும் தரத்தை மேம்படுத்தும் நுட்பமுறைகள், தாய்மையைப் பேணல், உணவுச் சமிபாட்டுச் செயன்முறை, அனுசேபம், உணவுப் பாதுகாப்பு, ஆடைகளைத் தூயதாக்கல், கட்டிளமைப் பருவத்தின் பிரச்சினைகள், வீட்டு மின் உபகரணங்களின் பயன்பாடு ஆகிய 16 பாடங்கள் இடம்பெறுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65696).

ஏனைய பதிவுகள்