15523 கவி உள்ளம்.

மு.சோமசுந்தரம்பிள்ளை. மட்டக்களப்பு: மண்டூர்க் கவிஞர் மு.சோமசுந்தரம்பிள்ளை நூல்வெளியீட்டுக் குழு, மண்டூர், 1வது பதிப்பு, பெப்ரவரி 1993. (மட்டக்களப்பு: சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகம்).

viii, 144 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 21×14 சமீ.

மண்டூர் இலக்கிய மரபில் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையைத்  தொடர்ந்து பல செந்நெறிப் புலமையாளர்கள் மண்டூரில் உருவாகியுள்ளனர். அந்த வகையில் பண்டிதர் வி.விஸ்வலிங்கம், பண்டிதர் வீரசிங்கம், வி.சீ. கந்தையா, குணரெத்தினம், சைவமணி பூ.சின்னையா, வரிசையில் மு. சோமசுந்தரம்பிள்ளை அவர்களும் குறிப்பிடத்தகுந்தவர். சோமசுந்தரம்பிள்ளை திருமண்டூர் முருகன் மாலை, களுதாவளைப் பிள்ளையார் மும்மணி மாலை, கவி உள்ளம் முதலிய பக்திப்பனுவல் ஆக்கங்களை எழுதினார். அவரது பல கவிதைகள் இன்னும் தொகுக்கப்படாது உள்ளன. மேற்சொன்ன கவிஞர்களில் இருந்து மு. சோமசுந்தரம்பிள்ளை சற்று வேறுபட்டவர். அவர் புலவர்மணியின் வழியிலே மரபுக்கும் நவீனத்திற்கும் இடைப்பட்டவராக விளங்கினார். தனது கவிதைகளிலே சமகால சமூக நிலைகளை அதிகம் வெளிப்படுத்தியவர். அவரது ‘கவியுள்ளம்’ கவிதைத் தொகுதி இதற்கு எடுத்துக்காட்டாகும். (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1515). 

ஏனைய பதிவுகள்

Casino slot games în bani

Content Cazino365 – Ghidul Casinourilor Online între Romania in 2024 Informații Despre 888 Casino România Club ş Cinste 888 Casino 2024 RTP-ul jocurilor Meniul este