15524 கவிதைச் சிறகு.

தாஸீம் அகமது. கொழும்பு 2: சித்தி ஜெசீரா தாஸிம், எஸ்.ஜே.பப்ளிக்கேஷன், இல. 9, சவுன்டர்ஸ் கோர்ட், 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

xvi, 176 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-53408-1-6.

சமூக விமர்சனமிக்க கவிதைகளை 1970 முதல் எழுதிவரும் டாக்டர் தாஸீம் அஹமதுவின் இக்கவிதைத்தொகுதி 72 கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. வெள்ளையில் ஒரு புள்ளி (1982), சுழற்சிகள் (1994), கண் திறவாய் (2011) ஆகியவற்றைத் தொடர்ந்து வெளிவரும் இவரது நான்காவது கவிதைத் தொகுதி இதுவாகும். சமூக எழுச்சிக் கவிதைகளையும் மனித வாழ்க்கை பற்றிய ஒப்பீட்டினையும் மருத்துவ விபரங்களையும் சமாதானக் குரலையும் உள்ளடக்கியவை. ஹைக்கூ கவிதைகளும் பழந்தமிழ் யாப்பிலமைந்த அவரது கவிதைகளும் ஓசைச் சிறப்பினால் கவனத்திற்குரியன. நவம்பர் 1981இல் (20.11.1981) ஸ்தாபிக்கப்பட்ட வலம்புரி கவிதா வட்டத்திற்கான எண்ணக்கரு இவரது சிந்தனையிலேயே கருக்கொண்டது. வகவம் அமைப்பு உருவாக்கப்பட்ட  37 வருடங்களில் 140இற்கும் மேற்பட்ட பௌர்ணமி திறந்தவெளிக் கவியரங்குகளை இவ்வமைப்பு நடத்தியுள்ளது.

ஏனைய பதிவுகள்

14146 நல்லைக்குமரன் மலர் 1999.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 1999. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). (6), 137 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14454 க.பொ.த (உயர்தரம்) இணைந்த கணிதம்: வகையீடு.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). viii, 57