15533 சந்தனக் காடு: கவிதைகள்.

எஸ்.ஏ.ஸ்ரீதர் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: கவிஞர் ஆமு.சி.வேலழகன் பவளவிழா சிறப்பு வெளியீடு, வாழைச்சேனை தமிழ் கலை, இலக்கிய மன்றம், விபுலானந்த வீதி, வாழைச்சேனை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2014. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, புகையிரத நிலைய வீதி).

114 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250.00, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-41494-0-3.

கவிஞர் ஆமு.சி.வேலழகன் அவர்களின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்பட்ட பவள விழாவின்போது அவரைப் புகழ்ந்து பாடப்பெற்ற 37 கவிஞர்களின் வாழ்த்துக் கவிதைகளைத் தொகுத்து இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவிஞரும் தானறிந்த கவிஞர் ஆமு.சி.வேலழகன் அவர்களை தத்தமது கவிதை வரிகளுக்குள் சிறப்பாக பதிவுசெய்துள்ளார்கள். கவிஞர்கள் மூனாக்கானா, ஜின்னாஹ் ஷெரிபுத்தீன், பூவரசன், எஸ்.முத்துமீரான், காசி ஆனந்தன், எம்.எச்.எம்.புஹாரி, அகளங்கன், நீ.பி.அருளானந்தம், முகில்வாணன், நீலாபாலன், செ.குணரெத்தினம், அண்ணாதாசன், ஆ.தங்கராசா, க.தங்கேஸ்வரி, நிலா தமிழின்தாசன், மண்டூர் அசோகா, உடப்பூர் வீரசொக்கன், ஆரையூர் அருள், கோவிலூர் தணிகா, சிவானந்ததேவன், வாகரையூர் முகிலன், செ.பத்மநாதன், மு.தவராஜா, முனைக்காடு பா.இன்பராசா, ஞா.சிவானந்தஜோதி, வே.யோகேஸ்வரன், சுந்தரமதி வேதநாயகம், சண். தங்கராசா, க.கிருபாகரன், ஆ.ஜெயச்சந்திரன், ஆரையூர் தாமரை, ச.மதன், எஸ்.ஏ.ஸ்ரீதர், மா.நாகமணி, ஆ.நித்தியானந்தம், வன்னியூரன், பொன். அழகுசிவன் ஆகியோரின் வாழ்த்துக் கவிதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

15024 நூலகப் பகுப்பாக்க அடிப்படைகள்.

செ.சாந்தரூபன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xii, 120 பக்கம், விலை: ரூபா