15535 சாத்தான்கள் அபகரித்த பூமி.

அருணா சுந்தரராசன். தமிழ்நாடு: வளரி எழுத்துக் கூடம், இல. 32, கீழரத வீதி, மானா மதுரை 630606, 1வது பதிப்பு, வைகாசி 2018. (தமிழ்நாடு: ரியல் இம்பெக்ட், சென்னை).

150 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 125.00, அளவு: 21.5×14.5 சமீ.

ஈழத்தில் பிறந்து தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்தபோதிலும், தான் வேரோடிய ஈழத்தமிழ் மண்ணை  மறவாது கவிதை பாடிவரும் குறிப்பிடத்தக்க கவிஞர்களுள் அருணா சுந்தரராசனும் ஒருவர். தமிழீழத்தின் பெருமூச்சு இவரது கவிதைகளின் வழியே பதிவாகியிருக்கின்றது. ஒவ்வொரு நிமிடமும் ஈழத்தின் சாவுக்குப் பக்கத்திலிருக்கும் தமிழனின் நிலை இங்கு அருணா சுந்தரராசனின் கவிதை வரிகளில் சத்தியமாகின்றன. கவிஞர் அருணா சுந்தரராசனின் கவிதை உலகம் வெளிப்படையானது. இந்தத் தொகுப்பிலுள்ள இவரது எல்லாக் கவிதைகளும் அரசியல்மயப்பட்டவை. எல்லோருக்கும் புரியக்கூடியது. சமகாலத்தில் வஞ்சிக்கப்பட்ட ஈழத் தமிழினத்தின் வலிகளை வாசிப்போர்க்கும் ஊட்டக்கூடியது. தமிழீழப் போராட்டம், இனப்படுகொலைகள், அரசியல் துரோகங்கள், அரச பயங்கரவாதம், சதிகள் என ஈழம் தொடர்பான எத்தனையோ விசயங்கள் இந்தக் கவிதைத் தொகுப்பின் பாடுபொருளாக அமைந்திருக்கின்றன. விளக்கம் தரவேண்டிய அவசியம் இல்லாத கவிதைகள் இவை.

ஏனைய பதிவுகள்

Nya Carat live casino recension Casinon 2024

Content Carat live casino recension – Casinoguide Se Sammanfattar Snabbare Hurså Via Diggar Snabbare Casino Hurdan Identifikation Befinner si Omedelbart Kungen Svenska Casinon Lek Såsom