15540 சிவப்புக் கிரக மனிதன்.

காத்தநகர் முகைதீன் சாலி. திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2018. (திருக்கோணமலை: பென் விஷன் (Ben Vision) அச்சகம், 15/5, ஹஸ்கிசன் வீதி).

xiv, 115 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-4628-55-7.

 ‘உணர்வுகளைக் கொட்டுகின்ற ஓர் ஆயுதமாக கவிதைப் பிரதிகளை நான் காண்கின்றேன். சம உணர்வு மனிதர்களோடு சம்பாஷிக்கின்ற ஊடகங்களில் முதன்மையானதாக கவிதை விளங்குகின்றது. என்னால் கொட்டப்படுகின்ற வார்த்தைப் பூக்கள் சிலர் கழுத்துகளுக்கு மாலையாகலாம். சில நாவுகளுக்கு கசப்பூட்டலாம். சில கண்களுக்கு வர்ணஜாலங்கள் காட்டி மகிழ்விக்கலாம். இருந்தபோதிலும் எனக்குள் இருக்கும்போது மாத்திரமே அது என் சொந்தக் குழந்தையாக அடங்கிக் கிடக்கின்றது. என் கவிக் குழவிகள் திரண்ட தொகுப்பாக மாறி மனிதக் கரங்களில் தவழுகின்ற போது, அவை பல பரிமாணங்களைப் பெற்றுக்கொள்கின்றன. வாழ்வின் அனுபவங்களை வார்த்தைப் பிரதிகளாக வடிக்கின்ற போது எந்தவொரு அநீதிக்கெதிராகவும் பொங்கியெழுந்து கவிதைப் பிரதியாய் கொட்டுகின்றபோது எழுகின்ற சுகானுபவம், ஆத்மதிருப்தி என்பன மனித சிந்திப்பின் மறுபக்கங்களை உணர்த்தி நிற்கின்றபோது எழுகின்ற பூரிப்பு என்பன கவிதையாக்கத்தின் மீதான காதலை உச்சிவரை இழுத்துச் செல்கின்றன. வெறுமனே வார்த்தைச் சோடிப்பு எனும் வட்டத்தை விட்டு வெளியேறி உணர்வுக் கடலுக்குள் மூழ்கி முத்துக் குளிக்கின்ற கைங்கரியத்தை கச்சிதமாக செய்து முடிக்கும் மாயாஜாலத்தை கற்றுத் தருகின்ற பிரதியாக்கங்கள் மாற்றுவழி ஊடகமாக பரிணமிக்கும் என்பதே கவிதையாக்கம் மீதான எனது நம்பிக்கையாகும்.’ (காத்தநகர் முகைதீன் சாலி, நுழைவாயிலில்)

ஏனைய பதிவுகள்

A real income Slots

Content Could you Win Real money Of Totally free Revolves? – savanna king slot machine real money Netent Position Video game Is Demonstration Brands Of