15541 சிறகு முளைத்த சிந்துகள்.

அக்கரையூர் அப்துல் குத்தூஸ். திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2017. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-955-4628-44-1.

இதுவரை வானலை வழியே வந்து வாசகரின் வாசற்கதவுகளைத் திறந்து செவிகளை ஊடறுத்து இதயங்களை ஈர்த்த தனது பாடல்களைக் கோவையாக்கி சிறகு முளைத்த சிந்துகளாய் எமது வாசிப்புக்காகத் தந்துள்ளார் கவிஞர் குத்தூஸ். இந்நூலில் உள்ள பாடல்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபனத்தின் அரங்கேற்றம், மெல்லிசைப் பாடல்கள், சந்தன மேடை, ஒலி மஞ்சரி, நம்நாட்டுப் பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகளிலும், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் கலையரங்கம், காதம்பரி, உதயகீதம், மின்னும் தாரகை போன்ற நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றவை. மேலும் சில பாடல்கள் வீடியோ திரைப்படங்களாக உருவான அன்புள்ள அவள், முதல் வார்த்தை, மலரே மௌனமா போன்ற திரைப்படங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த இசைப்பாடல் நூலின் முன்னோடியாக 1999இல் வெளிவந்த இவரது ‘ஸ்ருதி தேடும் சந்தங்கள்’ இசைப்பாடல் நூல் அமைந்துள்ளது.

ஏனைய பதிவுகள்