15552 தேயிலைப் புஷ்பங்கள்: 1979 முதல் 2018 வரை மலர்ந்தவை.

கோவுஸ்ஸ கே.ராம்ஜி உலகநாதன். சாய்ந்தமருது-14: தடாகம் கலை இலக்கிய வட்டம், 677, அஹமட் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (கொழும்பு 13: எஸ்.ஆர்.எஸ். அச்சகம்).

xvi, 74 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-624-95290-2-1.

ஊவா மாகாணத்தைச் சேர்ந்த கவிஞர் கோவுஸ்ஸ கே.ராம்ஜி உலகநாதன் தோட்டப் பாடசாலையில் நான்காம் ஆண்டு வரையும், நாவல்கம சிங்கள மகா வித்தியாலயத்தில் ஏழாம் ஆண்டு வரையும் கல்வி கற்றவர். 1978இல் இலக்கிய உலகில் காலடி வைத்த இவர் இலங்கையில் வெளிவரும் பெரும்பாலான நாளிதழ்;களிலும், சிறு சஞ்சிகைகளிலும் இதுவரை சுமார் 50 சிறுகதைகளையும், ஏராளமான கவிதைகளையும் எழுதிக் குவித்திருக்கிறார். அவற்றில் தேர்ந்த அறுபது கவிதைகளை இத்தொகுப்பில் இடம்பெறச் செய்துள்ளார். கோவுஸ்ஸ கே.ராம்ஜி உலகநாதனின் கவிதைகள் வாசிப்பதற்கு இதமானவை மட்டுமல்ல, சிந்தனைகளை தூண்டக்கூடியவை.

ஏனைய பதிவுகள்

17167 அதிசய நீரூற்று ஸம்ஸம்.

அகத்திமுறிப்பான். (இயற்பெயர்: செய்னுதீன் செய்கு பரீத்). பரகஹதெனிய: ஜம் இய்யது அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா. தலைமையகம், பறகஹதெனிய, Ntcl, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). vii,