15556 நாக்கு.

ஜே.பிரோஸ்கான். கிண்ணியா-3: பேனா பப்ளிக்கேஷன்ஸ், 92/4, உமர் ரலி வீதி, மஹ்ரூப் நகர், 1வது பதிப்பு, 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

68 பக்கம், விலை: ரூபா 260., அளவு: 22.5×16 சமீ., ISBN: 978-955-0932-25-2.

ஜமால்தீன் பிரோஸ்கான் கிழக்கிலங்கையின், திருக்கோணமலை மாவட்டத்தில் கிண்ணியாவைச் சேர்ந்தவர். பேனா பதிப்பகத்தினதும், கிண்ணியா பேனா இலக்கியப் பேரவையினதும் பணிப்பாளராவார். ஈழத்தின் கிழக்கின் மண்வாசனையும் இஸ்லாமிய மக்களின் மனவெளியும் தனி மனித உணர்வுகளுமாய் விரியும் கவிதைகளை இத்தொகுப்பில் தந்துள்ளார். இவை எளிமையானவை, ஆழம் கொண்டவை, வாசகர் மனதில் மிகவும் எளிதாகவும் இயல்பாகவும் தாக்கத்தை உண்டுபண்ணுபவை. ‘நாக்கு’ சொற்களை உருவாக்குவதில் முக்கியமான உறுப்பு. உணர்வுகளை, இயல்புகளை சொற்களாக்கும் முக்கிய உறுப்பு. இந்தக் கவிதைகள் நாக்கு என்ற உறுப்பு உருவாக்கும் பலவிதமான சொற்களைப் பற்றியவை. மனித இயல்புகளை மனித அற்பத்தனங்களை, நாக்கின் அரசியல் எனப் பல்வேறு தன்மைகளில் இக்கவிதைகள் அமைந்துள்ளன.

ஏனைய பதிவுகள்

16193 யுத்தத்தின் விலை.

இலங்கை தேசிய சமாதானப் பேரவை. கொழும்பு 6: இலங்கை தேசிய சமாதானப் பேரவை, 291/50, ஹவ்லொக் கார்டன்ஸ், 1வது பதிப்பு, ஜனவரி 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை). 32 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

16545 நான் ஓர் எழுத்தாளன் : கவிதை நூல்.

புயல் (இயற்பெயர்: பெ.ஸ்ரீகந்தநேசன்). யாழ்ப்பாணம்: தாய்மொழி வளர்ச்சி மன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், கச்சேரியடி). 72 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-7736-02-0.