14201 தமிழ் அகதிகளுக்காக மாமாங்கப் பிள்ளையார் தோத்திரம்.

ந.மா.கேதாரபிள்ளை (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: ந.மா.கேதாரபிள்ளை, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, 1வது பதிப்பு, மார்ச் 2007. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி). (10) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. இந்நூலில் எட்டு வரிகளில் அமைந்த 40 செய்யுள்கள் இடம்பெற்றுள்ளன. சித்தாயுர்வேத வைத்தியராகப் பணியாற்றும் கவிஞர் ந.மா.கேதாரபிள்ளை, வழக்கிழந்துபோகும் பழம் நூல்களை மீளப் பதிப்பித்து விற்பனைசெய்யும் பணியிலும் மட்டக்களப்பிலிருந்து பலகாலம் ஈடுபட்டு வந்துள்ளார். (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது).

ஏனைய பதிவுகள்