மலர்க் குழு. கொழும்பு 6: மௌனாஷ்ரம் ட்ரஸ்ட், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1992. (கல்லச்சுப் பிரதியாக்கம்). 122 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. 09.11.1992 அன்று வெள்ளவத்தை, சைவ மங்கையர் கழகத்தின் சிவானந்த நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இதில் முன்னுரை: திருமூலரும் திருமந்திரமும் (சுவாமி உமாஷங்கரானந்த சரஸ்வதி ஷிஓம்ஷர்), திருமூலரும் குருவும் (சுவாமி உமாஷங்கரானந்த சரஸ்வதி ஷிஓம்ஷர்), திருமந்திரத்தில் நல்லொழுக்கம் (வே.ந.சிவரரிஜா), திருமந்திரத்தில் அறவாழ்க்கை (க.ந.வேலன்), திருமந்திரத்தில் யோகப் பழக்கம் (பெ.கணநாதபிள்ளை), திருமந்திரத்தில் குருநெறி நிற்றல் (ஆ.குணநாயகம்), திருமந்திரத்தில் அகப்புற உணர்வு (சிவ. மகாலிங்கம்), திருமந்திரத்தில் அருள் நுகர்வு (கனகசபாபதி நாகேஸ்வரன்), திருமந்திரத்தில் பேராப் பெருவாழ்வு (நா.செல்லப்பா)ஆகிய ஆய்வுக்கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13410).
11404 தமிழ் இலக்கணம்: வினா-விடை: தொகுதி 2.
த.துரைசிங்கம். (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: உமா பதிப்பகம், 23 – 3/3 அரத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுலை 2014. (கொழும்பு 6: உமா பதிப்பகம்). 120 பக்கம், விலை: ரூபா 175., அளவு: