யாழ்ப்பாணம்: அமரர் கிருஷ்ணபிள்ளை சுமன் நினைவு வெளியீடு, அரியாலை, 1வது பதிப்பு, நவம்பர் 2004. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). 70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ. சிறந்த முருக பக்தரான அரியாலை அமரர் கிருஷ்ணபிள்ளை சுமன் அவர்களின் மறைவின் அந்தியேட்டித் தின வெளியீடாக 30.11.2004 அன்று வெளியிடப்பட்டுள்ள பிரசுரம். முருக வழிபாட்டுடன் சம்பந்தப்பட்ட பக்தி இலக்கியங்களில் தேர்ந்த பாசுரங்களையும், முருக வழிபாடு பற்றிப் பல்வேறு தகவல்களையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது. அறிமுகவுரை, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தர் கலி வெண்பா, கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம், இலங்கையில் முருக வழிபாடு, திருமுருக வழிபாடு, ஆகிய தலைப்புகளில் இந்நூலை பண்டிதர் சி.அப்புத்துரை அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார். நூலின் இறுதியில் சி.சுமன் புலமைப்பரிசில் நிதியம் பற்றிய தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36091).