கொழும்பு 04: வே.திருநீலகண்டன், 166, காலி வீதி, 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). 38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12.5 சமீ. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் சில பாகங்களைத் தேர்ந்தெடுத்து இத்தொகுப்பில் இடம்பெறச்செய்து கொழும்பு ஸ்ரீ அம்பலவாணேஸ்வரர் தேர்த் திருவிழாப் பவனியின்போது அன்பளிப்பாக வழங்கியுள்ளார் கொழும்பு லட்சுமிஅச்சக அதிபர் திரு. வே.திருநீலகண்டன் அவர்கள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16710).