14211 திருவாசகத் தேன்துளிகள் ஐந்து.

ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம். கொழும்பு 6: சைவ சித்தாந்த திருச்சபை, இல. 5, மூர் வீதி, 2வது பதிப்பு, ஜுலை 1992, 1வது பதிப்பு, டிசம்பர் 1989. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை). (6), 25 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 18×14 சமீ. ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம், ஆண்டுதோறும் நடாத்தும் திருவாசக முற்றோதல் நிகழ்வின் 13ஆவது ஆண்டு நிகழ்ச்சியின்போது, 31.12.1989 அன்று சைவ சித்தாந்த திருச்சபையின் கொழும்புக் கிளையினரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட சிறு பிரசுரமாகும். இதில் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சி, சிவபுராணம் என்பனவும், தில்லையில் அருளிய திருப்பொற்சுண்ணம், யாத்திரைப் பத்து என்பனவும், திருவண்ணாமலையில் அருளிய திருவெம்பாவையுமாக ஐந்து திருவாசகப் பதிகங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 034528).

ஏனைய பதிவுகள்

12918 – ‘தமிழ் மகள்’ மங்களம்மாள் மாசிலாமணி.

வள்ளிநாயகி இராமலிங்கம் (மூலம்), க.குமரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 44

14809 ரஸ்யாவின் ரஸ்புட்டீன் தீர்க்கதரிசியா? மக்கள் புரட்சிக்கு வித்திட்டவரா? (சரித்திர நாவல்).

எம்.ரி. செல்வராஜா. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2013. (சென்னை 94: பி.வி.ஆர். ஆப்செட்). xxx, 390 பக்கம்,

14027 இடைநிலை அளவையியல்.

ஜேம்ஸ் வெல்டன், A.J.மொனகன் (ஆங்கில மூலம்), S.H, மெலோன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம்,58, சேர். ஏர்னஸ்ட் த சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, 1967. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).