14215 தெய்வீக பாடல்கள்.

பொன். வல்லிபுரம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் தேவஸ்தானம், 1வது பதிப்பு, 1991. (கொழும்பு 10: இம்பீரியல் பிரஸ், 25, முதலாம் டிவிஷன், மருதானை). 114 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 19ஒ13 சமீ. இத் தெய்வீகப் பாடல்களின் தொகுப்பில், விநாயகரகவல், விநாயகர் திருவகவல், விநாயகர் நாமாவளி, குரு பஜனை, முருக நாமாவளி, முருக பஜனை, நடராச நாமாவளி, பஜனாவளி, சக்தி நாமாவளி, திருவிளக்கு பூசை, திருவிளக்கு வழிபாடு, திருவிளக்கு வழிபாட்டு முறை, நவக்ரஹ தோஷம் நீங்க, ஸ்ரீ ராகுகால துர்க்கா அஷ்டகம், போற்றிகள், ஸ்ரீரோக நிவாரணி அஷ்டகம், ராகுகால துர்க்கா வணக்கம், துக்க நிவாரண அஷ்டகம், ஸ்ரீ காளியம்மன் கவசம், அம்மன் தமிழ் அர்ச்சனை மலர், குங்கும மகிமை, அபிராமியம்மை பதிகம், சகலகலாவல்லி மாலை,கேதாரீஸ்வரர் நோன்பு கதை, கேதாரீஸ்வரர் பூஜை விதி, கந்த சஷ்டி கவசம், திருவெம்பாவை, வாழ்த்து, மங்களம் ஆகிய பிரிவுகளின்கீழ் இப்பாடல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18467).

ஏனைய பதிவுகள்