து.துசியந்தன். பருத்தித்துறை: எஸ். பதிப்பகம், வியாபாரி மூலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ்). 71 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 20×14.5 சமீ. ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர் து.துசியந்தன், யாழ்ப்பாணம்- வலயக் கல்வி அலுவலகத்தில் சித்திரக்கலைக்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகராவார். கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர் கல்வியை பூர்த்திசெய்த பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும், பட்டப்பின் டிப்ளோமா கல்வியையும் பூர்த்திசெய்தவர். சித்திரக்கலையில் சிறப்புப்பயிற்சி பெற்றவர். யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.