14502 பரத இசை மரபு.

ஞானா குலேந்திரன். தஞ்சாவூர் 5: கிருஷ்ணி பதிப்பகம், முன்றில் எண் 5 (சீ-5), முன்றில் சாலை, குடியிருப்பு வளாகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (மதுரை 16: அமுது அச்சகம்). 149 பக்கம், விலை: ரூபா 75.00, இந்திய ரூபா 50.00, அளவு: 21×13.5 சமீ. இந்நூலில் பரதக்கலை இசை மரபு, மேளப் பிராப்தி, தோடய மங்களமும் துதிப் பாடலும், அலாரிப்பு, மல்லாரி, புட்பாஞ்சலி, கவுத்துவம், ஜதிசுவரம், சப்தம், பதவர்ணம், பதம், கீர்த்தனை, ஜாவளி, தில்லானா, விருத்தம், குறத்திப் பாடல், மங்களப் பாடல், நட்டுவாங்கத் திறமை, பாடகர் தகைமை, தாள இசைக்கருவியாளர் பங்கு, பண்ணிசைக் கருவியாளர் பங்கு, வழிமுறைக் கலைஞர்கள், மரபும் மாற்றங்களும் ஆகிய 23 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முனைவர் ஞானா குலேந்திரன் இலங்கை தமிழ் அறிஞரும், எழுத்தாளரும், பேராசிரியையுமாவார். இசை, மற்றும் பரத நாட்டியம் தொடர்பாக ஆங்கிலத்திலும், தமிழிலும் பல நூல்களை எழுதியுள்ளார். இலங்கையில் கே. சிவசுப்பிரமணியம் தம்பதிகளின் இரண்டாவது மகளான ஞானா குலேந்திரன், கொழும்பு மெதடிஸ்த கல்லூரியில் கல்வி பயின்றவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை, கலாநிதி பட்டங்கள் பெற்றவர். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக சேர்ந்தார். பின்னர் இவர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு, அதே பல்கலைக் கழகத்திலேயே பேராசிரியராகவும், இசை, மற்றும் பரத நாட்டியத்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். இவரது கணவர் பேராசிரியர் ஏ. குலேந்திரன் அவர்களாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37541).

ஏனைய பதிவுகள்

Book of Ra Magic NovoLine

Satisfait Terme conseillé to play Book of Ra Mystic Bravoures for real? Une belle gaming non payants de Book of Ra Bien, c’continue les mêmes