A.B.M .இத்ரீஸ் (பதிப்பாசிரியர்). வாழைச்சேனை 05: காகம் (உயிர்ப்பைத் தேடும் வேர்கள்) வெளியீடு, மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 127 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 300., அளவு: 17.5×11 சமீ., ISBN: 978-955- 0697-07-6. 21ஆம் நூற்றாண்டில் அரங்கு ஆற்ற வேண்டிய பங்கு, முஸ்லிம் சினிமா முயற்சிகளும் சவால்களும், இஸ்லாமிய நிகழ்த்து கலைகளும் பிரச்சினைகளும் போன்ற தலைப்புக்களை ஒட்டி சமகாலத்தில் சோனக அரங்கு எதிர்கொள்ளும் சவால்கள் அதன் எழுச்சி, வீழ்ச்சிகள், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் போன்ற சமகால அரங்கோடு தொடர்புபட்ட பல விடயங்கள் இவ்வுரை யாடலில் பேசுபொருள்களாக மாறியுள்ளன. காகம் பதிப்பகம் கிழக்கிலங்கையின் வாழைச்சேனையைத் தளமாகக் கொண்டு இயங்கும் நூல்வெளியீட்டு நிறுவனமாகும். எழுத்தாளர் A.B.M. இத்ரீஸ் தனது சகோதரர்களின் உதவியுடன் 1998 ஆம் ஆண்டு இதனைத் தொடங்கினார். ஏபிஎம் மீடியா எனும் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இப்பதிப்பகம் செயற்பட்டு வருகிறது. தொடக்க நிலையில் யாத்ரா என்ற பெயரைக் கொண்டு இயங்கியது. 1999ஆம் ஆண்டு முதல் உயிர்ப்பைத் தேடும் வேர்கள் என பெயரை மாற்றியிருந்தனர். மாறிவரும் இலங்கைப் பதிப்புச் சூழலுக்கு ஏற்ப புதிய திட்டங்களுடன் 2010ஆம் ஆண்டு தொடக்கம் காகம் பதிப்பகம் எனும் பெயரில் இலக்கியம், சமயம், பண்பாடு, வரலாறு மற்றும் ஆய்வு நூல்களையும் சிறுவர் மற்றும் திறன்விருத்தி நூல்களையும் வெளியிட்டு வருகிறது.