பி.எஸ். அல்விறட். கொழும்பு: லங்கா பப்ளிஷிங் ஹவுஸ், திலக பிரஸ், 257, டாம் வீதி, 2வது பதிப்பு, ஜனவரி 2016, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (கொழும்பு: சொப்ட் பிரின்ட்). 112 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-4531-01-7. திருமறைக்கலாமன்றத்தின் கடந்த ஐம்பது வருட வரலாற்றுப் பாதை பற்றிய ஓர் அழகியல் பார்வையாகவும், மதிப்பீட்டுத் தேடலாகவும், ஒரு கலைஞனின் கண்ணோட்டமாகவும் தன் அனுபவங்களைச் சேர்த்து இந்நூலில் பதிவாக்கியுள்ளார். முன்னாள் புகையிரத நிலைய அதிபரான பி.எஸ். அல்விறட், மரியசேவியர் அடிகளாருடன் இணைந்து 1962இல் கலைப்பணியாற்றத் தொடங்கியவர். 25 ஆண்டுகள் திருமறைக் கலாமன்றத்தின் அறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, கலைமுகம் இதழின் இணைஆசிரியராக, ஊடகத் தொடர்பாளராக எனப் பல்வேறு பங்களிப்புகளையும் ஆற்றியவர். இந்நூலில் தனது அனுபவப் பகிர்வினை அந்த ஒரு மாலை நேரம், ஒரு விதை விருட்சமாகிறது, தலைமைத்துவத்தின் தனித்துவம், பன்முகப் பார்வையில் திருமறைக் கலாமன்றம், யுத்தமும் திருமறைக் கலாமன்றமும், கடல் கடந்த கலைப்பயணங்கள், தென் இலங்கைக் கலைஞர்களுடன் திருமறைக் கலாமன்றம், விழாக்களும் நிகழ்வுகளும் 1965-2015, யுத்த பேரிகையின் மத்தியிலும் சமாதான முழக்கம், திருப்பாடுகளின் காட்சியும் திருப்பு முனைகளும், பெண்ணியமும் திருமறைக் கலாமன்றமும், மன்றத்தின் கலையுலக மேதைகள்-கலைஞான பூரணர்கள், ஒரு புதிய சகாப்தத்தின் உதயம், சிறுவர்களே நம் எதிர்காலம், சமூக அரசியல் நீரோட்டத்தில் திருமறைக் கலாமன்றம், இலக்கம் 238-பிரதான வீதி சொல்லும் ஒரு வரலாற்றுக் கதை, கலை வளர ஒரு கவின்கலைகள் பயிலகம், கலையோடு மட்டுமல்ல சுனாமி அலையிலும் மன்றக் கலைஞர்கள், கலைத்துறையின் சிறப்பான சேவைக்கு, மன்றமும் புதிய தலைமுறையும், திருமறைக் கலாமன்றமும் சைவ சித்தாந்தமும், கலை வளர்க்க எழுந்து நிற்கும் கட்டிடத் தொகுதிகள், குடாநாட்டுக்கு வெளியே, இலட்சியத்தை நோக்கிய பணிகள், திருமறைக் கலாமன்றத்தின் பலம்-பலவீனம் ஆகிய தலைப்புகளினூடாகப் பதிவுசெய்கின்றார்.