15567 நிழல் தராத நிலங்கள்.

எஸ்.பி.பாலமுருகன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2016. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xii, 56 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-44-2.

மலையகத்து கவிஞர் பாலமுருகனின் எழுத்துக்கள் அவரது ஆதங்கங்களின் வெளிப்பாடு. அவரது கவிதைகளோ கோபப்படுகின்றன, கவலைப்படுகின்றன, ஆச்சர்யப்படுகின்றன. மொத்தத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒருமித்த குரலாக இக்கவிஞரின் கவிதைகள் எழுகின்றன. காலனித்துவ ஆட்சியில் மிதிபட ஆரம்பித்த மலையக மக்கள் இன்று வரை மாற்றம் இன்றி மாறிப்போன கால்களுக்குள் மிதிபட்டுக் கொண்டே கிடக்கின்றமையை ஆதங்கத்துடன் சில கவிதைகளில் வெளிப்படுத்துகிறார். உழைப்பின் பெருமையே வியர்வைதான் ஆனால் வியர்வை நாற்றத்தை வெறுப்பதன் மூலமாக உழைக்கும் வர்க்கம் ஒதுக்கப்படுவதை, ‘………புறக்கணிக்கப்படும் வாசனையால் ஒதுக்கப்படுகிறோம் ஊதுபத்திகள் இல்லாத கடவுளும் துர்மணமாகின்றது ஆனால் கடவுள் கடவுளாகின்றது”  என்பதன் மூலம் குறிப்பிடுகிறார். அதேவேளை சொற்ப சம்பளத்திற்கும் வேட்டு வைக்கும் மதுக்கடைகளையும், கள்ளுக்கடைகளையும் சாடியவர் தமது சேமிப்புகள்

கொள்ளையிடப்படுகின்றன என்கிறார். ‘….வாழ்வு குறித்த கவிதையை நமக்கு நாமே எழுதிக் கொள்ள வேண்டும்’ என்பதன் மூலமாக யாரும் நம்வாழ்வை மாற்ற மாட்டார்கள் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த முற்படுகிறார். இவ்வாறாக 33 கவிதைகளை தன்னகத்தே கொண்டு 63ஆவது ஜீவநதி வெளியீடாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. மலையகத்தில் பதுளைக்கு  அருகிலுள்ள குயீன்ஸ் டவுன் தோட்டத்தில் பிறந்த இவர் ஒரு விஞ்ஞான ஆசிரியராவார்.

ஏனைய பதிவுகள்

Melhores Jogos E Busca

Content Live Casino Drops And Wins Brutesco Criancice Cercar$2 Five Busca Dinheiro Abismo Criancice Algum Acessível Quais São Os Melhores Slots Gratuitos? Alguns atanazar optam