15570 நீரூறிய சொற்கள்.

ந.குகபரன். யாழ்ப்பாணம்: புலரி வெளியீடு, மாதர் சங்க வீதி, சித்தன்கேணி, 1வது பதிப்பு, மார்கழி 2020. (உடுப்பிட்டி: ஆகாயம் பதிப்பகம், இமையாணன்).

64 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-97425-0-5.

‘எளிமையான சொற்கள், யதார்த்தவாதப் பண்பு, சமகாலப் பிரச்சினைகள் என வாசகர்களை உடன் பயணிக்க வைக்கும் எழுத்தாளுமை கொண்டதாக இத்தொகுப்பு உள்ளது. புராண இதிகாசக் கதைகள், தொன்மங்கள், குறியீட்டுப் படிமங்களின் வழி குகபரன் கவிதைகளை யாத்துள்ளார். எல்லோரும் பகலையும் ஒளியையும் பாட இவர் விலகி இருளையும் இரவையும் பாடுகின்றார்’ (அணிந்துரையில் தி.செல்வமனோகரன்). நவரட்ணம் குகபரன் யாழ்ப்பாணம், சித்தன்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலரி இதழின் ஆசிரியராக விளங்கியவர். ஈழத்தில் ஒல்லாந்தர் காலத் தமிழ் இலக்கியங்கள் சமூக அரசியல் நோக்கு என்பது இவர் எழுதிய ஆய்வு நூலாகும். தமிழில் முது தத்துவமாணிப் பட்டத்தையும் கல்வியியல் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ள இவர் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

ஏனைய பதிவுகள்

14922 இப்றாஹீமின் இலட்சியக் கனவுகள்.

ஏ.எம்.எம்.அலி (தொகுப்பாசிரியர்). கிண்ணியா 4: ஷரீபா வெளியீட்டகம், 118, நகரசபை வீதி, 1வது பதிப்பு, 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 86 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 950.,