15574 பன்னீர்க் கூதலும் சந்தனப் போர்வையும்.

மருதூர் ஏ.மஜீத். கல்முனை: மருதூர் வெளியீட்டுப் பணிமனை, 436, பழைய சந்தை வீதி, சாய்ந்தமருது-1, 1வது பதிப்பு, டிசம்பர் 1992. (கல்முனை: எவர்ஷைன் பிரிண்டர்ஸ், சாய்ந்தமருது).

232 பக்கம், விலை: ரூபா 88.00, அளவு: 18×12.5 சமீ.

மருதூர் ஏ. மஜீத் (ஏப்ரல் 1, 1940 – திசம்பர் 26, 2020) சாய்ந்தமருது மெதடிஸ்த மிசன் கலவன் பாடசாலை, கல்முனை சாஹிரா கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றவர். இலங்கையின் பல பகுதிகளிலும் தமிழாசிரியராகப் பணியாற்றிய பின், வட்டாரக் கல்வி அதிகாரியாகவும், கல்முனை கல்வி வலயப் பிரதிப் பணிப்பாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வட-கிழக்கு மாகாண முஸ்லிம் கலாச்சாரப் பணிப்பாளராகவும் சிலகாலம் பணியாற்றியுள்ளார். கலை, இலக்கியத்தில் அதிக நாட்டம் கொண்ட இவர், இதுவரை இருபது நூல்களை எழுதியுள்ளதுடன், இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் தீவிரமாகச் செயற்பட்டுள்ளார். தென்கிழக்கு முஸ்லிம் தேசத்தாரின் நாட்டாரியல் (2007), ராமர் இந்தியாவில் பிறக்கவில்லை (2017), தென்கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு, நீரிழிவு வியாதியும் அது பற்றிய சில அனுபவக் குறிப்புக்களும், பன்னீர் வாசம் பரவுகிறது, மத்திய கிழக்கில் இருந்து மட்டக்களப்பு வரை, மறக்க முடியாத என் இலக்கிய நினைவுகள், மூடமறுக்கும் விழிகளும் துடிக்கும் இதயமும் ஆகியவை இவர் எழுதிய சில நூல்களாகும். ஐம்பது முதல் தொன்னூறு வரையான காலகட்டங்களில் இவர் எழுதிய கவிதைகளைத் தொகுத்து இக்கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்