15581 போர்க்காலம்: தோழிகளின் உரையாடல்.

தமிழினி ஜெயக்குமரன். கிளிநொச்சி: சிவகாமி ஞாபகார்த்த நிறுவகம், 168, ஆனந்த நகர், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (மஹரகம: கலர் வேவ் பிரைவேட் லிமிட்டெட், 92B, பமுனுவ வீதி).

48 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 19×13.5 சமீ., ISBN: 978-955-3921-00-0.

தமிழினி (சிவகாமி) விடுதலைப்புலிகளின் மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். அத்துடன் விடுதலைப் புலிகளின் இராணுவத் தாக்குதல்களிலும் பங்கு பற்றியவர். தனது 19ஆவது வயதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து அவ்வமைப்பின் இறுதி நாட்கள் வரை 19 வருட காலம்  பொராட்ட வாழ்வில் ஈடுபட்டவர். யுத்தத்தின் பின்னர் சிறிது காலம் சிறை வைக்கப்பட்டிருந்து புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டவர். அதன் பின்னர் கூர்வாளின் நிழலில் என்ற நூலையும் அதைத் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் தன் தொடர் பங்களிப்பினையும் ஆற்றத் தொடங்கியிருந்தார். சிறிதுகாலத்தில் புற்றுநோய் காரணமாக 2015இல் மரணமானார். தமிழினியின் கவிதைகள் ஆயுதம் தாங்கிப் போராடிய ஒரு பெண் போராளியின் அனுபவங்களினதும் சிந்தனைகளினதும் வெளிப்பாடுகள் என்பதால் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. இக்கவிதைகள் கடந்த காலப் போர்க்கால அனுபவங்களையும், சக போராளிகளுடனான அனுபவங்களையும், போருக்குப் பிந்திய தனது அனுபவங்களையும் அவதானிப்புகளையும் விபரிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன. இக்கவிதைகள் தற்காலச் சூழலிலிருந்து கொண்டு, கடந்த கால போராட்ட நிகழ்வுகளைச் சுயபரிசிலனைக்கு உள்ளாக்குவதால் முக்கியம் பெறுகின்றன.

ஏனைய பதிவுகள்

Greatest Casino Bonuses October 2024

Posts Finest Web based casinos You to definitely Undertake Jeton Deposits inside the 2024 Best Jeton Casino Bonuses Greatest Jeton Casinos online 2024 Ideas on