15609 யாருக்குச் சொந்தம் இந்தக் குழந்தை யாருக்குச் சொந்தம்.

எஸ்.பெருமாள். யாழ்ப்பாணம்: எஸ்.பெருமாள், 13A/3, புரூடி ஒழுங்கை, அரியாலை, 1வது பதிப்பு, மார்கழி 2017. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிறின்டர்ஸ், பிரவுண் வீதி).

xii, 46 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-72860-1-3.

இதில் தேசவியல், பொது இயல், சிறுவர் இயல், தமிழ் இயல், இறை இயல் ஆகிய ஐந்து பிரிவுகளில் எழுதப்பெற்ற 29 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகளில் ஆசிரியபீடத்தில் பணியாற்றிய எஸ்.பெருமாள், 50 வருடங்களுக்கு மேல் பத்திரிகைப்பணியில் ஈடுபட்டவர். பின்னர் சில காலம் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய இவர் பின்னர் யாழ்ப்பாணத்தில் வெளிவரும் உதயன் பத்திரிகையில் பணியாற்றினார். 2017இல் ஓய்வுபெற்றவர். தான் கண்டும் கேட்டும் அனுபவித்தவற்றை அடக்கி வைத்திராமல் தனது நெஞ்சக் கதவை அகலத் திறந்து விட்டிருக்கிறார். தலைப்புக் கவிதை-ஏதிலிகளாக ஏங்கி நிற்கும் எம்மவரின் நிலைமையினை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. இவரது முன்னைய கவிதைத் தொகுதி ‘நடந்தபடி தேடுவோம்’ 2016இல் வெளிவந்திருந்தது. இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுதியாகும். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 76085).

ஏனைய பதிவுகள்

Online casino Ipad Harbors

Articles Heimdall’s Entrance Cash Journey By Kalamba Video game | genies gems free spins no deposit Best 100 percent free Slot Casino games To experience