15620 வீரத் தாய்: கதைப் பாடல்.

சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்) பருத்தித்துறை: கலாபவனம், 1வது பதிப்பு, புரட்டாதி 1958. (பருத்தித்துறை: கலாபவன அச்சகம்).

(8), 32 பக்கம், விலை: 60 சதம், அளவு: 20×14.5 சமீ.

பழமையோடு புதுமையும் இணைந்த கதைப்பாடல் நூல் இது.  122 பாடல்களின் மூலம் வீரத்தாயொருத்தியின் கதையை கவிஞர் விறுவிறுப்பாகவும், கவிநயம் குன்றாமலும் சொல்லியிருக்கிறார். அழகிய நடையில் அமைந்த சொல்லடுக்கு எம் கண்முன் கம்பனையும் இளங்கோவையும், சேக்கிழாரையும் கொண்டுவந்து நிறுத்துகின்றன என இந்நூலுக்கான அணிந்துரை வழங்கிய வே. சிவக்கொழுந்து (யாழ்ப்பாணன்) புகழாரம் சூட்டியுள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 74265).

ஏனைய பதிவுகள்

14842 சமூகவெளி: தரிசனங்களும் பதிவுகளும்.

மு.அநாதரட்சகன் (இயற்பெயர்: முருகேசு இராஜநாயகம்). யாழ்ப்பாணம்: ஜீவநதி, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுலை 2015. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xviii, 90 பக்கம், விலை: ரூபா 250.,