அல்தாய் முஹம்மதோவ் (மூலம்), கே.கணேஷ் (தமிழாக்கம்). தலாத்து ஓயா: கே.கணேஷ், கரந்தகொல்ல எஸ்டேட், 1வது பதிப்பு, 1974. (அச்சக விபரம் தரப்படவில்லை).
33 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18.5×12.5 சமீ.
மொஸ்கோ நியூஸ் ஆங்கில வார இதழில் வெளிவந்த ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம் இது. அல்தாய் முஹம்மதோவ் சோவியத் யூனியனின் அஸர்பைஜானியராவார். 1930இல் பிறந்தவர். இரண்டாம் காதல் என்ற பிரபல நாவலின் ஆசிரியர். பல்வேறு சிறுகதைகள், திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியவர். மனிதர்கள், விண்மீன்கள் கூடுமிடம், சகநாட்டினர் போன்ற பிரபல்யமான நாடகங்களின் ஆசிரியர். அஸர்பைஜானிய மொழியில் எழுதப்படும் இவரது படைப்பாக்கங்கள் உடனுக்குடன் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்படுகின்றன. அஸர்பைஜானிய எழுத்தாளர் சங்கத்தின் தலைமைக் குழுவில் பணியாற்றுகிறார். மொழிபெயர்ப்பாளர் கணேஷ் கண்டியில் உள்ள அம்பிட்டி என்னும் பிரதேசத்தை சார்ந்த தலாத்துஓயா என்னுமிடத்தில் பிறந்தவர். இதன் காரணமாக இவர் தலாத்துஓயா கணேஷ் எனவும் அழைக்கப்பட்டார். இவரது இயற் பெயர் சித்தி விநாயகம் என்பதாகும். ஆனால் இவர் ‘கே.கணேஷ்’ என்ற பெயரிலேயே அறிமுகமாகியிருக்கின்றார். 02 மார்ச் 1920 ஆம் ஆண்டு பிறந்த அவர் 05 ஜீன் 2004 அன்று தமது 86 வது வயதில் மறைந்தார்.