15625 கனவெல்லாம் எதுவாகும் (மொழிபெயர்ப்புக் கவிதைகள்).

 ஐயாத்துரை சாந்தன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2017. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

64 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-30-8567-2.

ஐயாத்துரை சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27இற்கும் அதிகமான  நூல்களை எழுதியிருக்கிறார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவார். ஆங்கிலத்திலும் தமிழிலுமாக தனது புனைவுகளை எழுதும் சாந்தன் இரண்டு மொழிகளிலும் சாகித்திய விருதினைப் பெற்றிருக்கின்றார். அவ்வப்போது தான் வாசித்த வேளைகளில் காலம் தேசம் எல்லாம் கடந்த மானுடப் பொதுமையைக் கணநேர மின்னலாய்க் காட்டிச் சென்றவையும் தன்மனதக்குப் பிடித்தமானதுமான கவிதைகளை மொழிபெயர்த்துச் சேகரித்து வந்துள்ள இவர் இவற்றை இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். இதிலுள்ள 40 கவிதைகளும் கவிதைகள், மரணசாசனம், கனவுகள், நினைவுப் பலகை, நிர்வாணமா ரோசாப்பூ?, நாரைகள், கீழே பார் அழகிய நிலவே, பனி விழும் மாலையில் தோப்பருகே தயங்கி நிற்றல், நேற்றையின் ஆத்மாக்கள், கடல், பேரழிவு 1944, தாயாயிருப்பது, வாழ்க்கை இனியது, பசி, இன்னிஸ் ஃபிறீயின் ஏரிச் சிறு தீவு, எங்கள் அணி நடை, மீண்டும் வந்தாய், நம்பாதே, வாழ்த்துகிறேன் காடுகளே, ஒத்திப்போன கனவு, எனக்கு நானே கற்றுக்கொடுத்தேன், ஐம்பது, சுழற்சி, முதல் நாளின் சூரியன், கறுப்புக் காற்சட்டை அணிந்தவருக்கு ஒரு நினைவுச் சின்னம், எப்போதைக்கும் நானிருப்பேன், இரவினில் சந்திப்பு, ஒரு பெண் மீதான அணுகுமுறை, கிற்றார், வாளிக்குள் நிலா, தடைசெய்யப்பட்ட கவிஞனுக்கு, கனவெல்லாம் எதுவாகும்?, தலைமுறைகள், மை-லாய் கிராமம் வியட்நாம் 1968, போர், பிழம்பு, நம்பிக்கை, பென்னம் பெரிய மீன், மைமல் பொழுதும் வெள்ளாடுகளும், இறந்த மனிதன் விட்டுச் சென்றது ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் மூலக் கவிஞர்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்