15628 அவங்க பேசமாட்டாங்க (நாடகங்கள்).

ரொஹான் பெணாட். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2010. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).

(6), 55 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-8715-63-5.

இந்நூலில் அருட்பணியாளர் ரொஹான் பெணாட் அவர்கள் எழுதிய ‘அவங்க பேசமாட்டாங்க’, ‘இரு முனைகள்’, ‘அது போதாதா?’, ‘ஒரு துளி கறுப்பு ஜுலாய்’, ‘மகத்துவம் தேடும் மகரந்தம்’ ஆகிய ஐந்து நாடகங்கள் இடம்பெற்றுள்ளன. அவங்க பேசமாட்டாங்க என்ற முதலாவது நாடகம் சிறுவர் துஷ்பிரயோகத்தை கருவாகக் கொண்டமைந்தது. இரு முனைகள், அது போதாதா?, ஒரு துளி கறுப்பு ஜ{லாய் ஆகிய மூன்றும் ஈழத்தின் போர்க்காலத்தை மீள நினைவூட்டுகின்ற வரலாற்று நாடகங்களாகும். இறுதி நாடகமான மகத்துவம் தேடும் மகரந்தம் குடும்பப் பிணக்கொன்றைச் சுற்றி வடிவமைக்கப்பட்ட சமூக நாடகமாகும். இந்நூல் 57ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49212).

ஏனைய பதிவுகள்

16410 அறிவியல் கதைகள்.

கோகிலா மகேந்திரன். தெல்லிப்பளை: சோலைக்குயில் அவைக்காற்றுக் கள வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 2020. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்). vi, 26 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 19×21.5 சமீ., ISBN: