ஜீ.பீ.வேதநாயகம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2020. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆப்செட்).
xii, 268 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.
இந்நூலில் பிரசுரமாகியுள்ள ஏழு நாடகங்களும் ஒரே வகையானவை. யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்தினரின்அக்காலகட்ட வாழ்வியலை, ஊடாட்டத்தை, சிக்கல்களை நகைச்சுவை இழையோட யதார்த்த நடையில் மண்வாசனை கமழச் சொல்லியிருக்கிறார். நாட்டு நடப்புகள் ஆங்காங்கே நாசூக்காக நையாண்டி செய்யப்பட்டுள்ளன. கந்தசாமி-நல்லம்மா என்னும் பிரதான பாத்திரங்களை வகைமாதிரியாகக் கொண்டு அவர்களைச் சுற்றிச் சுழல்வதாக நாடகங்கள் பின்னப்பட்டுள்ளன. நாயில்லாமல் நானில்லை, தாம் தூம் தை தை, காதல் போயின் கல்யாணம், கண்டுபிடி அவளைக் கண்டுபிடி, சனிப் பெயர்ச்சி, திருடா திருடி, தோம் தோம் ததிங்கண தோம் ஆகிய தலைப்புகளில் அவ்வேழு நாடகங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 75121).