மறவன்புலோ செல்லம் அம்பலவாணர். கொழும்பு 15: மறவன்புலோ செல்லம் அம்பலவாணர், 478/28, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: கே.ஜே.என்டர்பிரைசஸ், 63, விகாரை ஒழுங்கை, வெள்ளவத்தை).
xxx, 238 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-42626-1-4.
மறவன்புலோ செல்லம் அம்பலவாணர், 1992 முதல் 2015 வரை இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகிய தனது நாடகங்களில் தேர்ந்த ஒன்பது முப்பது நிமிட நாடகங்களை நூல்வடிவில் தந்திருக்கிறார். இவை சட்டத்தின் திறப்புவிழா (இலங்கை வானொலியில் ஒலிபரப்பான ஆசிரியரின் முதல் நாடகம்), காயாத வடுக்கள், இருபது ரூபா நோட்டு, செய்வினை, தகைமை, மயிர்க்கொட்டிகள், பெட்டிசம், பெறுமதி, அறுவடை (2013ஆம் ஆண்டு ரோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் அகில இலங்கை ரீதியில் நடத்திய நாடகப் பிரதி எழுதும் போட்டியிவ் முதலாமிடத்தைப் பெற்றது) ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.