கயிலைநாதன் தில்லைநாதன். வல்வெட்டித்துறை: ஜனனி வெளியீட்டகம், புது வளவு, பொலிகண்டி, 1வது பதிப்பு, ஆனி 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
xvi, 48 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-7726-03-8.
இந்நூலில் நவீன அடிமைகள், இன்றும் கண்ணகிகள், மானெல் தீவு நாடு, இப்போதைக்கு என்ன வழி ஆகிய ஆகிய நான்கு நாடகங்கள் இடம்பெற்றுள்ளன. இவை கல்லூரி விழாக்களில் மேடையேற்றம் கண்டு பாராட்டப் பெற்றவை. இந்நூலாசிரியர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். கல்வியியல் கல்லூரிக்கு வருகை தந்த 2003 தொடக்கம் பல நாடகங்களை இவர் மேடையேற்றியுள்ளார். நாடகமும் அரங்கியலும் என்ற துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவர் தேசிய கல்வி நிறுவகத்தால் தயாரிக்கப்படும் நாடகமும் அரங்கியலும் பாடத்திற்கான அறிவுரைப்பு வழிகாட்டி நூல்களை எழுதிவருகின்றார். பாடத்திட்டக் குழுவிலும் கடமையாற்றுகின்றார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72183).